நடிகர் சல்மானுடன் பூஜா ஹெக்டே!

Filed under: சினிமா |

நடிகர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“முகமூடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது “பீஸ்ட்” திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது சல்மான் கானுடன் “கிசி கா பாய் கிசி கா ஜான்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே வெளிநாடு சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளது.