மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Filed under: சினிமா |

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர்.

மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஓடிடியில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டது நிலையில், மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்எஸ் புரத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ்; மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் மாஸ்டர் படம் வெளியாகும் எனவும் பின்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.