இன்று தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யாவும் -சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடால் 2021ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் குறித்து சோபியா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இன்று மாலை இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதோடு நடிகர் நாகார்ஜுனுடன் சேர்ந்து போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.