திடீரென நடிகர் விக்ரமுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு அவர் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் “பொன்னியின் செல்வன் 2” படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட நேற்று முதல் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே நடிகர் விக்ரம் இன்னும் சில நாட்களுக்கு ‘தங்கலான்’ படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்றும் அவர் முழுமையாக குணம் ஆனவுடன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார். ‘தங்கலான்’ படக்குழுவினர் தற்போது நடிகர் விக்ரம் இல்லாத காட்சியினை படப்பிடிப்பு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.