நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருகையை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வெளியிட்டு உறுதிபடுத்தினார்.

அதற்கான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின் தனது 69வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் வருகை குறித்து, “விஜய்யை விஜயகாந்தோடு ஒப்பிட முடியாது. விஜயகாந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. நடிகர் சங்க பிரச்சனையின் போது தலைவராக இருந்து அதன் கடனை தீர்த்தவர். அதே போல விஜய் தான் சார்ந்த நடிகர் சங்க பிரச்சனைக்காவது குரல் கொடுத்துள்ளாரா? விஜய் ஒரு மேடை ஏறி பேசட்டும். அது யாராவது எழுதிக் கொடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. அப்போது அவர் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும்” என விமர்சித்துள்ளார்.