நடிகர் நடராஜன் இலங்கையில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் அதைப்பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்சே குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல தமிழ் ஒளிப்பதிவாளர் மற்றும், “சதுரங்க வேட்டை” திரைப்பட நடிகருமான நடராஜ், “இது ராஜபக்சே குடும்பத்திற்கு அவசியமானதுதான்” என்ற வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பல திரையுலகினரும் ராஜபக்சே ஆட்சியின் வீழ்ச்சி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.