நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் வெற்றி பெற்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஷ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால், நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் அவர் அரசு வெற்றி பெற்றுள்ளது. இன்று சபா நாயகர் பாஜகவின் விஜயகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மகேஷ்வர் ஹ்சாரி 164 எம்.எல்.ஏக்களின் ஓட்டெடுப்பில் புதிய சபா நாயகராக தேர்வானார்.