நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

Filed under: சென்னை |

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கி இதுநாள் வரையில் மொத்த வருவாயாக ரூ.200 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாதாரண மின்சார ரயில், அரசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகமாக இருப்பதே பயணிகள் அதிகம் ஈர்க்கப்படாததற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசகர் குழுவை நியமனம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.