நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் கிடைக்கும், 1000 ரூபாய்க்கு ஓட்டை விற்காதீர்கள் கமல்!

Filed under: அரசியல் |

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் கிடைக்கும், 1000 ரூபாய்க்கு ஓட்டை விற்காதீர்கள் கமல்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எனவே உங்களது பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்துக்கும் விற்று விடாதீர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அனைத்திலும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடி அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசன் அமைத்திருக்கும் கூட்டணி அமையுமா என்பதை தேர்தலுக்குப் பின்னர் தான் தெரிய வரும். இந்த நிலையில் கமல்ஹாசன் இன்றைய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது ’மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் 50 லட்சம் வேலை வாய்ப்பு எங்கள் ஆட்சியில் சாத்தியமானது என்றும் அதை ரூபாய் 1000 ரூபாய்க்கும் இரண்டாயிரத்துக்கும் விற்று விடாதீர்கள் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்