இந்தி பட வாய்ப்பு வந்தால் டீ-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் – நடிகை ஆர்த்தி ட்வீட்!

Filed under: சினிமா |

கடந்த சில தினங்களாக இந்தி மொழிக்கு எதிரான ஷர்ட்களை அணிந்தும் மற்றும் கருத்துக்களை தெரிவித்தும் திரையுலகினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கான ஹாஸ்டக்ளும் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதைப்பற்றி நகைச்சுவை நடிகையான ஆர்த்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு பிறருக்கு அவங்க மொழி அப்படிதான். ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம். இந்தி பட வாய்ப்பு வந்தால் tடீ-ஷர்ட்யை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆர்த்தியின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.