நானியின் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி?

Filed under: சினிமா |

“தகரா” திரைப்படம் நானி நடிப்பில் ஆக்ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்காக உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீசானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் நல்ல வசூல் செய்து வருவதாகவும், முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 38 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.