தமிழ்நாட்டில் கொரோனாவின் 3ம் அலையின் போது, உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது.
கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொற்று இருந்தது. ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ தாண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை சார்பில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. “கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை (01.-04.-2023) முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.