நிதிநிறுவன இயக்குனர் ஒருவர் ரூபாய் 100 கோடி மோசடி வழக்கில் கைதானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் சதீஷ்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனை அடுத்து சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் திடீரென அவர் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related posts:
வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நெல்லையில் மீண்டும் பரபரப்பு. பந்தல் ராஜா ஒட்டிய வால் போஸ்டர் ஒட்டுமொத்த வெள்ளாளர் சமுதாய மக்களும் த...
மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி த...
டேங்கர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி, உடல் நசுங்கி ஓட்டுநர் பலி.