நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தல் இந்தியாவின் வரைபடம் மாறும், மணிப்பூர், லடாக், பிரச்சனை போன்றவை நாடெங்கும் நடக்கும். இந்தியாவில் தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான்” என எச்சரித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.