இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா உறுதி!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள் மட்டுமில்லாமல் நடிகர்கள், பிரபலங்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெயராம் தாகூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தத் தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா பாசிட்டிவ் நபருடனான தொடர்பில் இருந்த காரணத்தினால், கடந்த ஒரு வாரமாக நான் எனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டேன். பின்பு சில அறிகுறிகள் இருந்ததால் நான் பரிசோதனை செய்து கொண்டேன். அந்த முடிவில் எனக்கு கொரோன இருப்பது உறுதியாகியது.

https://twitter.com/jairamthakurbjp/status/1315569378969051136

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எனது இல்லத்தில் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மேலும், சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.