சென்னை,மே 18
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒன் லிட்டர் கொள்ளவு கொண்ட பாக்கேட் ஆயில் வழங்கிட ஏதுவாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,51,85,000/ தொழிலாளர் ஆணையர் பெயரில் அரசாணை எண்.82 நாள்.03.04.2020 மூலம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் கிட்டதட்ட 2 லட்சம் பேர்கள் மேலாக வெளிமாநில தொழிலாளர்கள் பல நிலைகளில் பணிபுரிந்து வருவதாக ‘தி இந்து தமிழ் நாளிதழ்’ உட்பட பல்வேறு பத்திரிக்கைகள் சுட்டிகாட்டி உள்ளது. 17.05.2020 தேதியிட்ட தி இந்து தமிழ் நாளிதழில் தமிழக முதல்வர் கடந்த மே 6 முதல் 15ம் தேதி வரை 55,473 வெளி மாநில தொழிலாளர்கள் 43 ரயில்களில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தினமும் சுமார் 10 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாக செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 17.05.2020 தேதியிட்ட தி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழில் சென்னை, உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றம் ஆர்.ஹேமலதா ஆகியோர் தமிழ்நாட்டில் எத்தனை பேர்கள் வெளிமாநிலத்திலிருந்து பணிபுரிகிறார்கள் மற்றும் அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் அரசால் வழங்கப்பட்டது என பல கேள்விகள் அரசை கேட்டுள்ளது. ஆனால், இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் எதை பற்றியும் கவலைபடாமல், லஞ்சம் எந்த வகையில் பெறலாம் எப்படி மற்றவர்களை பழிவாங்குவது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் இன்று தமிழகம் நந்தகோபால் போன்ற அதிகாரியால் தலைகுனிந்து இருக்கிறது.
தொழிலாளர் ஆணையர் அரசுக்கு 01.04.2020 (க.எண்.எல்2/9320/2020) தேதியிட்ட கடிதத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் 3,409/- தொழிலாளர்களும், உணவகங்களில் 7,891/-தொழிலாளர்களும், தோட்ட நிறுவனங்களில் 4,953/- தொழிலாளர்களும் ஆக மொத்தம் 16,253/- வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிவதாக எவ்வித ஆதாரங்கள், பதிவேடுகள். புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில் அரசுக்கு தவறான தகவல் அளித்தன் விளைவாக, அரசும் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உண்மையான தகவல் அளித்து இருப்பார் என்ற நம்பிக்கையில் நிதி ஒதுக்கியது. ஆனால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித நிவாரண உதவிகள் வழங்கிட சரியாக திட்டமிடாத காரணத்தால், வெளிமாநில தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாக காரணமாக இருந்தவர் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால்.
1979-ம் வருட மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் (வேலையமர்வு மற்றும் பணிநிபந்தனைகள் ஒழுங்குப்படுத்தல்) சட்டமானது 5 அல்லது அதற்கு மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு பொருந்தும். இச்சட்டத்தின் பிரிவு 4-ன்கீழ் வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதன்மை வேலையளிப்பவர் (Principal Employer) பதிவு செய்து கொள்ள வேண்டும். அச்சட்டத்தின் பிரிவு 6-ன்கீழ் முதன்மை வேலையளிப்பவர் தன்னை இச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்து கொள்ளாமல் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் முதன்மை வேலையளிப்பவரோ அல்லது ஒப்பந்ததாரர்களே உரிமம் ஏதும் தொழிலாளர் துறையில் பெறுவதில்லை. இந்நிலையில், தொழிலாளர் ஆணையர் அளித்துள்ள வெளி மாநில தொழிலாளர்கள் குறித்தான புள்ளிவிவரங்கள் சரியானது அல்ல என்பதை உறுதியாக கூற இயலும். இச்சட்டத்தின் அமலாக்கத்தினை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் சரியாக அமுல்படுத்தி இருந்தால், இன்று வெளி மாநில தொழிலாளர்கள் இத்தகைய பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல அரசும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்காது.
ஒவ்வொரு மாதமும் பணிதிறனாய்வு என்ற போர்வையில் சார்நிலை அலுவலர்களை பணி திறனாய்வுக்கு அழைத்து மாவட்டம் வாரியாக அவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை லஞ்சமாக பெறுவதில் கவனம் செலுத்திய தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் இச்சட்டத்தின் அமலாக்கத்தை முறைபடி செய்து இருந்தால் இந்த தொழிலாளர்கள் சொல்யென துயரம் அடைந்து இருக்க நுறு சதவிகிதம் வாய்ப்பு இல்லை.
தொழிலாளர் ஆணையர் அளித்த புள்ளி விவர அடிப்படையில், அதில் பாதி பேருக்கு கூட இதுவரை அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் சென்று அடையவில்லை என்ற தகவல்கள் பல ஊடகங்கள் மூலமாகவும் தொழிற்ச்சங்கங்கள் மூலமாகவும் அறிய வருகிறது. லட்சகணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பசி, பட்டனியால், வேதனையோடு, உணவு கூட கிடைக்காத காரணத்தால், நடந்தே தமது சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு காரணம் முறையாக திட்டமிடாத, நிர்வாக திறமையற்ற தொழிலாளர் ஆணையர் நந்தகோபால். இந்த நிர்வாக திறமையற்ற லஞ்சம் பெறுவதையே குறிக்கோலாக கொண்ட தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் தொழிற்ச்சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பல்வேறு மாநில தொழிலாளர்கள்.