நீதிபதி ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக கொண்டாட்டத்தால் முடங்கிய சாலைகளின் போக்குவரத்தால் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அயோத்தியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவிலில் கொண்டாட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றது. இந்த ஊர்வலங்களால் ஒரு சில நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. ராமர் கோவில் திறப்பு விழாவின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை முடக்கப்பட்டது குறித்து தாமாக முன்வந்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் மேத்தா என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். ராமர் இலங்கைக்கு பாலம் கட்டினார் என்பது உண்மைதான். ஆனால் அதை மக்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் சாலைகளில் திரளாக கூடி போக்குவரத்தை முடக்குவது முரணாக உள்ளது என்றும் அவர் அதற்கு தெரிவித்துள்ளார்.