ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

Filed under: இந்தியா |

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அடிக்கடி பயங்கரவாதிகளும் மற்றும் பாகிஸ்தான் சேர்ந்தவர்களும் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைவதும் மற்றும் தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சியை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் சிங்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அந்த பகுதியை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இதையடுத்து திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த கதையின் முடிவில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால், அவர்கள் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.