ஜூலை 11
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். பொறுப்புக்கு வந்த பிறகு சமீபகாலமாக ஆதிதிராவிடர் நலத்துறை பிற்பட்டோர் நலத்துறையாக மாறிக்கொண்டு வருகிறதாம். அதே நேரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் உதவியாளராக உலாவிக் கொண்டு ஒரு குட்டி ராஜாங்கமே ரவி என்பவர் நடத்தி வருகிறாராம்.! புள்ளியியல் துறையில் பணியாற்றிய ரவி டெப்டேஷனில் எப்படியோ ஆதிதிராவிடர் நலத்துறைக்குள் புகுந்து கரப்ஷன் பேர்வழிகள் உடன் கைகோர்த்துக் கொண்டு சத்தமில்லாமல் பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறாராம்.
தற்போது இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள ரவி அமைச்சருக்கு டீ பாயாக செயல்பட்டு வருவதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்து வரும் பல உள்குத்து விவகாரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்படி எழுதுங்களேன் சார்… என்று சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர் ஒருவர் நம்மிடம் செய்தி வாசிக்கவே நாம் விசாரணையில் இறங்கி விசாரித்தபோது பல திடுக் தகவல்கள் நமக்கு கிடைத்தன. நாம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் நமக்குத் தெரிந்த ஊழியர் ஒருவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது சார்… ஆணையராக முனிய நாதன் வந்த பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றதாக தெரியவில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 50 P.G. Asst post சென்னை TRP மூலம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடம் வழங்குகையில் தவறாக தன்னிச்சையாய் கலந்தாய்வுக் உட்படுத்தி பணி நியமன ஆணை வழங்காமல், ஆணையர் முனியநாதன் அவர் இஷ்டப்படி பணி ஆணை வழங்கியதை நேர்மையாய் முதலில் காலிப்பணியிடங்களை காட்டி அவரவர் விருப்பத்திற்கு இடங்களை தேர்வு செய்யவிடாமல் செய்ததை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைச்சர் சில குறிப்புகளை கொடுத்து ஒற்றை சாளர முறையில் யாருக்கும் பாதிப்பு வராமல் பணியிடம் வழங்க கூறினார். உடனே, ஆணையர் முனியநாதன் எனக்கே குறிப்பா.? எனக்கூறி அந்த 50 நபர்களுக்கும் பணியிடம் வழங்காமல் நிறுத்திவைத்து பழி வாங்கி உள்ளார். இதே பள்ளிக்கல்வித்துறையில் தேர்வான P.G. Asst களுக்கு பணியிடம் வழங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரது அடமெண்ட் செயலால் கடந்த 6 மாதமாக தேர்வாகியும் 50 பேரும் பணியிடம் பெறமுடியாமல் தவித்துக் கொண்டு வருகின்றனர்.
முன்னாள் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரம் பயன்படுத்திவந்த அரசு ஜீப்பை எந்த மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டதோ அங்கே ஒப்படைக்கச் சொன்ன ஆணையர் முனியநாதன், சண்முகசுந்தரம் பந்தாடப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு மாற்றிய பிறகு அதே ஜீப்பை தற்போதைய நேர்முக உதவியாளர் ஹேமலதா பயன்படுத்துவதற்கு மட்டும் எந்த வகையில் ஆணையர் அனுமதித்தார்.? ஜாதி ரீதியாக பழிவாங்குதல் இவர் பணிபுரிந்து உள்ள இலக்காகளில் பல இரண்டாம் நிலை அலுவலர்களை தற்கொலைக்கு உட்படுத்தி நாலு அலுவலர்கள் தற்கொலை செய்துள்ளார்களாம். அரசு ஆணை வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமலும் யாருக்கும் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு உதவிடாமல் பழிவாங்குதல், காப்பாளர்களிடம் ராஜ்குமார் என்ற கண்காணிப்பாளர் மூலம் மாதந்தோறும் கையூட்டு பெற்று கல்லா கட்டுதல், குறிப்பிட்ட தலைமையாசிரியர்கள் மூலம் கையூட்டு பெறுதல்.!
கோள் மூட்டும் நபர்களின் பேச்சைக் கேட்டு பழிவாங்குதல், சி பிரிவு கண்காணிப்பாளர் செல்வராணி சொல்வதை அப்படியே பின்பற்றுதல் இத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை மறந்து உயர்ஜாதி அலுவலர்களை ஊக்குவித்து கையூட்டு பெற்று வருதல். இவர் சார்ந்த ஜாதி உட்பிரிவினரை பழிவாங்குதல் போன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும் வெளியில் நேர்மையாக இருப்பதாக ஆணையர் முனியநாதன் நடித்துக் கொண்டு வருகிறாராம். சி பிரிவு கண்காணிப்பாளர் செல்வராணியின் மூலம் பணம் பெற்றுக் கொண்டு 10 கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. பணம் கொடுத்தவர்களுக்கு நல்ல நல்ல இடமாகவும், பணம் தராதவர்களுக்கு கண்ட இடங்களுக்கு இடமாறுதல் செய்துள்ளாராம். அதே நேரத்தில் அலுவலகத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்களுக்கு இடம் மாற்றம் செய்யாமல் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு உள்ளாராம்.
கடந்த நான்கரை வருடமாக டி பிரிவு கண்காணிப்பாளராக இருந்த அன்பழகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும் அவரை விசாரிக்காமல் அவருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்தாராம். தற்போது திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆக அன்பழகன் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். இரண்டாம் நிலை அலுவலகங்களில் மிகவும் இளையவரான கணக்கு அலுவலர்க்கு JD Incharge கொடுத்துள்ளதால் அவர் ஆணையர் அலுவலக பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளரிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததை ஆணையர் பார்வைக்கு ஊழியர்கள் கொண்டு சென்றோம். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் AO விடம் தனக்குரிய கமிஷனை பெற்று வருகிறாராம். திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறை வெக்காளியம்மன் தெருவைச் சேர்ந்த அறிவுச்செல்வன் என்பவர் தமிழக கவர்னருக்கு கடந்த 17/2/2020 அன்று அனுப்பிய புகார் மனுவில்… திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றிவரும் அன்பழகன் என்பவர் திருச்சி தனி வட்டாட்சியர் ( ஆதிந ) கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவ/ மாணவியர் விடுதிகளில் மார்ச் 2019 மாதத்தில் உணவு கட்டண பட்டியல்கள் தணிக்கை செய்யப்பட்டது ஏன்.? மார்ச் 2019 இல் விடுதிகள் 16 நாட்கள் நடத்தப்பட்டதற்கு பதிலாக 31 நாட்கள் நடத்தப்பட்டதாக உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டு சமர்பிக்கப்பட்டதால் தணிக்கை (Audit ) செய்யப்பட்டது. அந்த செலவு 2019 – 2020 இல் அடங்கும். ஆனால், 2020 – 2021 உணவுச் செலவு ( Allotment ) இல் செலவிட காப்பாளர் காப்பாளினிகளிடம் 30% கமிஷன் அடிப்படையில் 2019 – 20 ஆண்டிற்குரிய செலவின தொகையை 2020 – 21 இல் ஈடுசெய்ய பட்டியல் தயார் செய்யப்பட்டு கருவூலத்திற்கு அனுப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 2019 – 2020 ஆண்டிற்கான ( Audit ) செலவினத்திற்கு தனியே Allotment பெற்றே செலவிட வேண்டும் ஆனால் கமிஷன் அடிப்படையில் ஊழல் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் சுமதி ( தற்போது தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் ) என்பவர் தனது பதவியை பயன்படுத்தி தனது படிக்காத தங்கை கன்னியம்மாள் என்பவருக்கு Cook post பெற்றதை விசாரிக்க அனுப்பப்பட்ட மனு மீது அவருக்கு சுமதி சாதகமாக செயல்பட ரூபாய் 50000 முன் தொகை பெற்றுள்ளார். முகவரியில் நபர் இல்லை என அறிக்கை அனுப்பியுள்ளார் ஏலூர்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காப்பாளர் முருகேசனிடம் அவர் மாவட்ட பணி மாறுதல் பணியிடை நீக்கம் சம்பந்தமாக உள்ள கோப்புகளை சரி செய்ய (அரிசி கடத்திய போது லால்குடி தாசில்தார் பிடித்தார் ) ரூபாய் 50,000 பெற்று கோப்புகளை சாதகமாக முடிக்க பணம் பெற்றுள்ளார். ஏற்கனவே ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் டி பிரிவில் அன்பழகன் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளை செய்து உள்ளார் என்று தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பல்வேறு குற்றச்சாட்டு பதிவுகள் சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் 1356 மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் பட்டதாரி ஆசிரியர்களை வார்டனாக பணிநியமனம் செய்யப்படும் போது தங்கும் விடுதிகளில் 24 மணிநேரமும் அங்கேயே இருக்க வேண்டும். அத்துடன் மாணவ – மாணவிகளுக்கு டியூஷன் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், தற்போது தங்கும் விடுதிகளில் பணிபுரியும் வார்டன்கள் யாரும் டியூஷன் எடுப்பதாக தெரியவில்லை. தங்கும் விடுதியில் சமையலுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய்களை சமையலருக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியில் தனது சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுகிறார்களாம். திடீரென அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்தவுடன் மின்னல் வேகத்தில் தனது தங்கும் விடுதிக்குச் சென்று விடுவார்களாம். சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளில் பணிபுரியும் வாட்ச்மேன், சமையலர் ஆகிய இருவரும்தான் இரவு பகலாக அந்த தங்கும் விடுதியை பார்த்துக் கொள்கிறார்களாம்.
ஒரு தங்கும் விடுதியில் பணிபுரியும் வார்டன் ஒருவர் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே அந்த தங்கும் விடுதியில் பணிபுரிய வேண்டும். 3 ஆண்டுகள் முடிந்து விட்டால் உடனடியாக வேறு ஹாஸ்டலுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். ஆனால், சில வார்டன்கள் பல வருடக்கணக்கில் ஒரே ஹாஸ்டலில் பணிபுரிந்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு ஆதிதிராவிடர் நலக்குழு செயல்படுகிறது. இந்தக் குழு ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாணவ மாணவிகளின் விடுதிகளில் ஆய்வுக்கு சென்றாள் வார்டன்கள் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களை மிரட்டுகிறார்கள். அத்துடன் நலக்குழு உறுப்பினர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக பொய்யான தகவலை சில வார்டன்கள் கூறுகிறார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் அதாவது வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்து அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை ஹாஸ்டலில் வார்டனாக நியமனம் செய்யலாம். ஹாஸ்டலில் வார்டனாக தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அப்போது ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும். அத்துடன் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும். நல்ல தரமான கல்வியை மாணவ மாணவிகளுக்கு தர முடியும்.!இந்தியாவிலேயே மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அதாவது (காலர்சிப்) வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் காஞ்சிபுரத்தில் மாணவர்கள் இல்லாத கல்லூரிக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்ததாக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாம்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சுமார் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனிய நாதன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் சமூக நீதி துறையில் இது சம்பந்தமாக புகார் செய்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் இயக்குனர் முரளிதரன் ஹாஸ்டலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் நலத்துறை ஹாஸ்டலில் மாணவர் வருகைப்பதிவு அதாவது மெட்ரிக் வருகை பதிவேடு கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்தாராம். அதன் பிறகு வந்த ஆணையர் முனியநாதன் மாணவர்களின் மெட்ரிக் வருகைப் பதிவேடு விவகாரத்தை கிடப்பில் போட்டு விட்டாராம்.
ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குனராக இருந்த சிவசண்முக ராஜா என்பவர் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகளில் சமையல் செய்வதற்கு ஸ்டீம் பாய்லர் அடுப்பு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். ஆனால் அந்த பாய்லர் அடுப்புகள் செயல்படாமல் துருப்பிடித்து காயலான் கடைக்கு செல்ல தயாராக உள்ளது. இந்த பாய்லர் அடுப்பு விவகாரத்தில் மத்திய மாநில நிதிகள் பலகோடி வீணாகியது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனிய நாதன் எந்தெந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்தாய்வு செய்தார். என்னென்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை வெளிப்படையாக கூறுவாரா என்று ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் பட்டிமன்றம் போட்டு பேசிக்கொண்டு வருகிறார்களாம். தமிழக ஆதிதிராவிடர் நலத் துறையில் புரையோடிக் கொண்டிருக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தி, ஆணையர் முனியநாதனுக்கு பதிலாக துடிப்புமிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்ய வேண்டும் என்று நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறுகிறார்கள் ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் சில நேர்மையான உயரதிகாரிகள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அரசை வழிநடத்தி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா.?