பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என ஆவேசமாக கூறியுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க வேண்டாமா? அவர்கள் என்ன விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றார்கள்? வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர், பஞ்சாப் முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் வினேஷ் போகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு தகுதி நீக்கத்தை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.