பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

Filed under: தமிழகம் |

செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளிலிருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு, அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். வரும் செம்ப்டம்பர் 30 முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம் இதோ,
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்பட்டு, வந்தவாசி, எஞ்ச்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம் காடுமன்னார் கோயில் செல்லும் பேருந்த்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி பைபாஸ் பணிமனை அருகில், வேலூர், ஆரணி,ம் திருப்பத்துர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த், மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைசத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ஈசி ஆர்) மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.