பதவிக்காக நீட்டை தமிழ் நாட்டிற்குள் நுழைய விட்டனர் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Filed under: அரசியல் |

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேப்டாப் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:

தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும், மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில் நீட்டை தமிழகத்திற்குள் நுழையவிடல்லை.

ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.