“பதான்” பட டிக்கெட் விலை குறைப்பு!

Filed under: சினிமா |

நடிகர் ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் உட்பட பலர் நடித்து வெளியான “பதான்” திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் பட டிக்கெட்டை குறைத்துள்ளது.

4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் “பதான்” திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் “பாகுபலி 2,” “கேஜிஎப் 2” மற்றும் “டங்கல்” ஆகிய திரைப்படங்கள் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளன. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இன்று ஒருநாள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிப்ளக்ஸ்களில் “பதான்” திரைப்படத்தின் டிக்கெட் 110 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.