பத்திரிகையாளர் மணியின் விளக்கம்

Filed under: தமிழகம் |

பத்திரிகையாளர் மணி ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குத்தான் போயிருப்பார் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஊடகத்திற்கான பேட்டியளித்த பத்திரிக்கையாளர் மணி, “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் சிறை சென்றார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷம் விட்டு வருகின்றனர். அண்ணாமலை கூறியதில் எந்த தவறும் இல்லை, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதலமைச்சர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது ஜெயலலிதா விஷயத்தில் தான். ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை இந்த விஷயத்தை கூறியதன் உள்நோக்கம் என்ன என்பதை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.