வருமானவரியினர் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆகிய 11 மாநிலங்களில் 64 அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இச்சோதனையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.