பவானி ஆற்றில் தலையில்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியிலுள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் தலையில்லாத அந்த உடலை கைப்பற்றியது. அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பவானி ஆற்றில் கைப்பற்றப்பட்ட தலையில்லாத உடல் கிடைத்துள்ளதை அடுத்து அப்பகுதியில் காணாமல் போனவர் குறித்த புகார் மனுக்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.