நாளுக்கு நாள் பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த அதீத குளிரினால் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவ்வாண்டின் குளிர்காலம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆசியாவின் வடக்கு பிராந்தியங்களில் குளிர் வாட்டி வருகிறது. இந்தியாவில் தலைநகர் டில்லி தொடங்கி காஷ்மீர் வரை குளிர் வாட்டி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் குளிர் நிலை மோசமாக உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான குளிரால் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு 36 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் குழந்தைகள் குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது. மோசமான குளிர் காரணமாக இந்த மாத இறுதி வரை பள்ளி வளாகங்களில் அசெம்பிளி நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.