பாகிஸ்தான் நடிகை பேவரெட் இவரா?

Filed under: உலகம்,சினிமா |

பிரபல பாகிஸ்தான் நடிகையும், சூப்பர் மாடலுமான நடாஷா என் பேவரைட் இந்திய நடிகர் அஜீத்குமார் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னணணி நடிகைகளில் ஒருவரும் சூப்பர் மாடலுமான நடாஷா எல்லோராலும் பெரிதும் அறியப்படுபவர். இவர், லக்ஸ் ஸ்டைல் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். நேற்று நடிகர் அஜீத்குமாரின் “துணிவு” திரைப்பட முதல் சிங்கிலான “சில்லா சில்லா” என்ற பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாருப்பாளர் போனிகப்பூரும், இசையமைப்பாளரும், படக்குழவினரும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தான் நடிகை நடாஷா தன் டுவிட்டரில், “என் பேவரெட் இந்திய நடிகர் அஜீத்குமாரின் “துணிவு” திரைப்பட முதல் சிங்கில் வெளியாவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.