உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: உலகம் |

ஜமைக்காவை சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இதன் பின்பு 100, 200 மீட்டர், 4*100 தொடர் ஓட்டம் போன்றவற்றில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

உசைன் ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றார். இவரை உலகின் அதிவேக மனிதர் எனவும் அழைக்கப்படும். 2017ஆம் ஆண்டு உசைன் ஓய்வு பெற்றார்.

உசைன் போல்ட் சமீபத்தில் தான் 34வது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று உசைனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.