டிஐஜி போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் என்ற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்ததாக தெரிகிறது. கடந்த 27ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் இருவரும் ஆயுத படைக்கு மாற்றப்பட்டனர். சம்பந்தப்பட்ட இருவரையும் டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.