குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
ஓட்டுநரின் செயலால், பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சூழல் தவிர்க்கப்பட்டு, சிறிய அளவிலான விபத்தாக முடிந்தது. சிறு காயங்களுடன் பயணிகளும், ஓட்டுநரும் தப்பினர்.
இந்த விபத்தால் குமுளி மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமுளி காவல்துறை விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
Related posts:
விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்ட...
ஓசி டிக்கெட் என நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து. சிறை பிடித்த மக்கள்.
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் ...
விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் - முதல்வர் பழனிசாமி!



