மூத்த வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக பிரபலம் நியமனம் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரி என்பவரை சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ள நிலையில் அந்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று விட்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் மனு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.