பாஜக மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம், எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான். அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள், எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என எனது வழக்கறிஞர்கள் கூறியதால் தான் நான் ஆஜராக வில்லை, என்னை விசாரிப்பது பாஜகவின் நோக்கம் அல்ல நாடாளுமன்ற தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விடாமல் விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்ய நினைக்கின்றனர்” என்று கூறியுள்ளார். மதுபானம் கொள்கையை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் இன்று அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.