கார் விபத்து ஒன்றில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல் நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரிலிருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நீரஜா ரெட்டி (52 வயது) அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர், 2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.ஏல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2019ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த அவர் பின்னர், பாஜகவில் இணைந்து, பாஜக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது.