காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Filed under: இந்தியா |

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவரவாதிகளும் நடைபெற்ற மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடி வீரர்கள் ஒன்றிணைந்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதனால், ரேபன் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மற்றும் தீவிரவாதிகளுடன் நடந்த தீவிரமான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.