பாடலாசிரியரான பிரபல நடிகை

Filed under: சினிமா |

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. இவர் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின் “சின்ன கவுண்டர்,” “இந்தியன்,” “வால்டர் வெற்றிவேல்,” “மகாநதி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது மலையாள சினிமாவில் டி.என்.ஏ என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி பாடலாசிரியராக சுகன்யா அறிமுகமாகியுள்ளார். இதுபற்றி அவர், “ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பிற்கு மகிழ்ச்சி. சினிமாவில் புதிய பரிமாணத்தில் பாடலாசிரியராக வந்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.