சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவரோடு துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடுபவராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 90களில் நடக்கும் விதகமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தை விரைவில் முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியவாலாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த அவரோடு இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.