பா.ரஞ்சித்தின் உதவியாளரான விடுதலை சிகப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விடுதலை சிகப்பி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர் சீதை லட்சுமணன் அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பு மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.