பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக தற்போது இருப்பது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான்.

ஆனால் அதைவிட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ விவகாரம் தான் ஹைலைட் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் கூட்டம் ஒன்றில் பேசியபோது “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். அந்த ஆடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “தில்லு முல்லு” படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் மீசையோடும் மீசையில்லாத கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோல்தான் திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒன்று சொல்வார்கள், ஆட்சியில் இல்லாத போது ஒன்று செல்வார்கள்” என்று பேசியுள்ளார்.