இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இம்மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து பல தலைவர்கள் வந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.