கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவை இந்தியா வழங்கும் – பிரதமர் மோடி!

Filed under: உலகம் |

பிரதமர் மோடி அவர்கள் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உடன் தொலைபேசியில் கலந்து துரையாடல் மேற்கொண்டார். இதில் கொரோனா வைரஸ், சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை பற்றி இருவரும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

இரு தலைவர்களும் இந்தியா தனியார் துறையில் இலங்கையில் முதலீடு மற்றும் மதிப்பு கூட்டல் போன்றவற்றை மேம்படுத்துவதை பற்றி பேசியுள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உறுதி கொடுத்துள்ளார்.

மேலும் சில திட்டங்களை பற்றி இரு நாட்டின் தலைவர்களும் பேசியுள்ளனர்.