கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு தப்பித்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த செய்தி உறுதிப்படுத்தவில்லை.
அவ்வப்போது ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய மனைவி மற்றும் மகளும் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றனர். நேற்று பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி திடீரென பிரபாகரன் மகள் என்று கூறப்படும் துவாரகா வீடியோ வைரலானது இந்த வீடியோவை பார்த்த ஈழ தமிழர்கள் பிரபாகரன் மகள் உயிரோடு இருப்பதாக எண்ணி வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் உண்மையான வீடியோ அல்ல என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் எது உண்மை என்பது போக போக தான் தெரியவரும்.
Related posts:
சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு - அமைச்சர் மைக...
கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!
கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!
மூன்று மாம்பலம் 10 லட்சமா?