காற்றில் பறப்பது போல் டிக் டாக் வீடியோ செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் – வைரல் வீடியோ!

Filed under: விளையாட்டு |

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். அவருடைய ரசிகர்களுக்காக அப்போது அவருடைய சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோ போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சிரியத்தில் உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர்.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மியூசிக் பின்னால் பாடவிட்டு தண்டால் எடுப்பது போல் கைகளை ஊன்றினார். அதன் பிறகு இரண்டு கைகளையும் தூக்கிவிட்டு எதையும் பிடிக்காமல் காற்றில் பறப்பது போல் சில நிமிடங்கள் எழுந்துள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.