ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் மும்மைப ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
மும்பை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தின் நின்று இரண்டு சிறுவர்கள் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் சிறுவர்கள் கைகளைக் கழுவியபடி இருந்தனர். அதில் ஒரு சிறுவன் கைகளைக் கழுவிட்டு தண்ணீர் குடித்த பின், இன்னொரு சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்தார். உடனே ரயில் அருகில் வரும் சத்தம் கேட்டு, ஓரமாக ஒதுங்கிவிட்டார். ஆனால், தண்ணீர் பாட்டிலை வாங்கிய சிறுவன் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டார். இதில், அவர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.