விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பீச் ஒலிம்பிக் போட்டி நடைபெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடிய பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறார், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்றே பீச் ஒலிம்பிக்ஸ் போட்டி தமிழ்நாட்டில் நடந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.