புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை!
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் குறைக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கொரோனா பேரிடரால் உலக நாட்டு அரசுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் மாநில அரசுன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போதுமான நிதி இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் செலவினங்களைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் அரசு செய்யும் மொத்த செலவுகளில் 20 சதவீதத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக பல அறிவிப்புகளை தலைமைச் செயலாளர் கே சண்முகம் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்புகளில் முக்கியமானாவை:-
- அரசு செலவிலான மதிய விருந்து, இரவு விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது
- அலுவலகத் தேவைகளுக்கான ஃபர்ன்ச்சர்கள் வாங்குவது 50 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.
- அரசு விழாக்களில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.
- அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெளிமாநிலங்களுக்கு விமானங்களில் செல்லும்போது ரயில்கட்டணத்துக்கு இணையானத் தொகைதான் வழங்கப்படும்.
- அனைத்து அரசு அலுவலகங்களிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்பலாம்.