மாவட்ட போலீசார் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல புதிய உத்தரவுகள் விதித்துள்ளனர்.
நாளை முதல் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்திருந்தனர். தற்போது சென்னையில், நாளை மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர் போலீசார். அதன்படி, இந்த அறிவிப்பை மீறி யாரேனும் நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.