புயல் சேதத்துக்கு ரூ.2000 கோடி நிவாரணம்: சந்திர பாபு கோரிக்கை !

Filed under: இந்தியா |

chandrababu-naiduஹுத்ஹுத் புயலால் ஆந்திர மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி தொலைபேசியில் சந்திர பாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். புயல் சேதம் முழுமையாக இன்னு மதிப்பிடப்படாத நிலையில் அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கரையை கடந்தது.

ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்திலும் 2 பேர் பலியாகினர்.