புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பெண்களுக்கான தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை துவக்கி வைத்துள்ளார்.
பெட்ரோல் போடுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்பதால் பெண்கள் அதிருப்தியடைவார்கள். பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது. அமைச்சர் சந்திர பிரியங்கா இது குறித்து கூறிய போது, “இதே போன்று அனைத்து பெட்ரோல் மையங்களிலும் பெண்களுக்கென தனி பங்க் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
Related posts:
சாமானியர்களை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் - வேல்முருகன்!
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்!
பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!