கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக விஜய மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விதம் குறைவாக இருந்தால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்படும் நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related posts:
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்...24 மணி நேரத்தில் அதித்தீவிரம்
“நான் அரசியல்வாதி இல்ல.. போர்வீரன்!” கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!
வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!



